×

தேனி அல்லிநகரத்தில் பயணியர் நிழற்குடையை மறைத்து பிளக்ஸ் பேனர்கள்

 

தேனி, ஜன. 28: தேனி அல்லிநகரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையினை மறைத்து பிளக்ஸ் பேனர்களை வைப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேனி அல்லிநகரத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர்கள் இந்த பயணிகள் நிழற்குடை அருகே நி்ன்று பெரியகுளம் செல்லும் டவுன்பஸ்கள், வடபுதுப்பட்டி செல்லும் மினி பஸ்களில் செல்லும் பயணிகள் இந்த பயணியர் நிழற்குடையில் நின்று பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் இந்த பயணியர் நிழற்குடைக்கு செல்லும் வழியை மறித்து தரைப்பகுதியில் இருந்து மெகா சைஸ் பிளக்ஸ் பேனர்களை அமைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியாமல் சாலையில் நின்று பயணித்து வருகின்றனர். எனவே, அல்லிநகரம் போலீசார் பயணிகள் நிழற்குடையை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேனி அல்லிநகரத்தில் பயணியர் நிழற்குடையை மறைத்து பிளக்ஸ் பேனர்கள் appeared first on Dinakaran.

Tags : Theni Allinagar ,Theni ,Allinagaram ,Theni Allinagaram ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை